விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும் – நயினார்
தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ஒரு மாதத்தில் துவங்கும், வியூகம் அமைப்பதற்கு இரண்டு மாதங்கள் தேவையில்லை, இரண்டு மணி நேரமே போதுமானது என பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மோடி முகாம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “முதலமைச்சருக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. சத்துணவு, […]
மோடி சென்னை வந்தவுடன் சூரியன் மறைந்துபோனது” – நயினார் நாகேந்திரன்
மதுராந்தகத்தில் நடைபெற்றுவரும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. அதற்கான வேலைகளை மோடியும், எடப்பாடி பழனிசாமியும் செய்துகொண்டிருக்கிறார்கள். மதுராந்தகம் பொதுக்கூட்டத்தால் சட்டமன்றத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. என்டிஏ கூட்டணி பொதுக்கூட்டம் அல்ல, ஒரு மாநாடு. இந்த கூட்டம் அவர்களின் ஆட்டத்தை முடிக்கும் கூட்டம். திமுக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முடியவில்லை. திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றுவதை தடுக்கும் தி.மு.க ஆட்சிக்கு முடிவு […]
நயினாருக்கு பதில் சொல்ல விரும்பவில்லை… VSB பதில்
கரூர் சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு வைத்து நயினார் நாகேந்திரன் பேசிய நிலையில், அரசியலுக்காக, அற்பத்தனமான கருத்துக்களை சொல்பவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று பதில் அளித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. “உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லட்சம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கரூர் தான்தோன்றி மலையில் […]
MGR-ஐ போல் எல்லோரும் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்து விட முடியாது- நயினார்
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை முறையாக செய்ய வேண்டியது முதல்-அமைச்சரின் கடமை. விஜய் கட்சி தூய சக்தியா என்பதை தேர்தலில் மக்கள் தான் சொல்ல வேண்டும். விஜய்யின் நோக்கம் தி.மு.க. இருக்கக்கூடாது என்பதுதான். தேர்தலில் எத்தனை முனை போட்டி இருந்தால் தி.மு.க.வை வீழ்த்த முடியும் என்பதை உணர்ந்து விஜய் செயல்பட்டால் நல்லது. எம்.ஜி.ஆரை போல் எல்லோரும் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்து விட முடியாது. வரும் தேர்தல் எங்களுக்கு […]