நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

டில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகம் மற்றும் ஒன்பது முன்னணிப் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த மிரட்டல் கடிதத்தில், நாடாளுமன்றத்தைத் தகர்க்கப் போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, டில்லி காவல்துறையினர், தீயணைப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகம் மற்றும் பள்ளிகளில் பாதுகாப்புப் படையினர் நடத்திய விரிவான சோதனையின் முடிவில், அங்கு வெடிபொருட்கள் எதுவும் […]

நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகளையும் விவாதிக்க அதிகாரம் உள்ளது- திருச்சி சிவா

நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சனைகளையும் விவாதிக்க அதிகாரம் உள்ளது என திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார். மல்லிகார்ஜுன கார்கே பேச்சுக்கு ஆளும் பாஜக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திருச்சி சிவா கருத்து தெரிவித்துள்ளார். மாநிலங்களவை விதி 238ன் படி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவகாரங்களையும் விவாதிக்கலாம். உலகில் உள்ள அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கலாம் என முன்னாள் மாநிலங்களவை தலைவர் தன்கர் உத்தரவிட்டுள்ளார். “தன்கர் வழங்கிய உத்தரவு இன்னும் நிலுவையில் உள்ளது, உத்தரவு ரத்தாகும் வரை […]

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பிரதமர் நாற்காலியை நோக்கிப் பாய்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளிலிருந்தே மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், பல்கலைக்கழக மானிய குழு (UGC) சர்ச்சை உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன் காரணமாக அவையில் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி நேற்று மாலை 5 மணியளவில் பதிலளித்துப் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவை தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் […]

அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கு மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல்

இந்திய அணுசக்தித் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் வகையிலான புதிய ‘சாந்தி’ மசோதாவை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இந்தியாவின் அணுசக்தி கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைக்கும் நோக்கில், கடந்த 15ம் தேதியன்று ‘சாந்தி’ எனும் அணுசக்தி மேம்பாட்டு மசோதா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. கடந்த 1962ம் ஆண்டு இயற்றப்பட்ட அணுசக்திச் சட்டம் மற்றும் 2010ம் ஆண்டு அணுசக்தி சேதப் பொறுப்புச் சட்டம் ஆகியவற்றை நீக்கிவிட்டு, அதற்கு மாற்றாக இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. […]