அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை: விதிகளை மீறினால் நாடு கடத்தல் உறுதி

அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் நிர்வாகம் மாணவர் விசா நடைமுறையில் பல்வேறு புதிய மாற்றங்களை அமல்படுத்தி வருகிறது. இந்தச் சூழலில், அமெரிக்காவில் சட்டங்களை மீறும் மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அமெரிக்காவில் உள்ளூர் சட்டங்களை மாணவர்கள் மீறினால், அது அவர்களின் விசா ரத்து செய்யப்படுவதற்கும், அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவதற்கும் வழிவகுக்கும். மேலும், எதிர்காலத்தில் அமெரிக்காவிற்குப் பயணம் செய்ய முடியாதபடி நீண்ட கால தகுதி இழப்புக்கும் இது காரணமாகும். மாணவர்கள் […]