சிக்கிமில் மீண்டும் நிலநடுக்கம்: அதிகபட்சமாக 3.4 ஆக பதிவு
சிக்கிம் மாநிலம் நாம்சி பகுதியில் மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. அதிகாலை 2.32, 4.25, 5.38 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் முறையே 3.3, 3.4, 3.3 என பதிவானது. சிக்கிமில் நாம்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் 11 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
லடாக்கில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..
லடாக்கில் லே பகுதியில் 11.51 மணிக்கு 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கார்கிலுக்கு வடமேற்கே 290 கிலோமீட்டர் தொலைவில் 171 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ஜம்மு காஷ்மீர், லே மற்றும் டெல்லி முழுவதும் கூட இது உணரப்பட்டது.
மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்-கட்டிடம் இடிந்து 2 பேர் பலி
மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதில் வீடுகள் இடிந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மெக்சிகோ நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இன்று காலை 7.58 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. குரேரோ மாநிலத்தில் உள்ள சான் மார்கோஸ் நகருக்குத் தென்மேற்கே 14 கிலோமீட்டர் தொலைவில், 35 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் நாட்டின் ஜனாதிபதி கிளாடியா ஷெய்ன்பாம், […]
சுனாமி அலர்ட் …ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் வடக்கு கிழக்குப் பகுதியில் டிசம்பர் 8 இரவு (உள்ளூர் நேரம் 11:15) ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், ஜப்பானின் பசிஃபிக் கடற்கரை முழுவதும் சுனாமி எச்சரிக்கையைத் தூண்டியுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் ஹொன்ஷூ தீவின் வடக்கு முனையில் உள்ள ஆமோரி மாகாணத்திற்கு வெளியே, கடல் மட்டத்திலிருந்து 53 கி.மீ. ஆழத்தில் 80 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது. ஜப்பான் வானிலை அமைப்பு (JMA) சுனாமி அலைகள் 3 மீ. (10 அடி) உயரம் வரை வரலாம் […]