60 தொகுதி முதல் 70 தொகுதி வரை.. பிப். 14ம் தேதிக்குள் யாருடன் கூட்டணி- கிருஷ்ணசாமி
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, “மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களுடைய வாழ்வாதாரத்தை மாஞ்சோலையிலேயே நிலைநாட்டித் தர வேண்டும் எந்த காரணத்திற்காகவும் உங்களை வெளியேற்றக் கூடாது என்று சட்ட ரீதியாக போராடி வருகிறார்கள். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தேவைகளை பூர்த்தி செய்து அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென தேசிய மனித உரிமை ஆணையமும் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே தமிழ்நாடு அரசுக்கும் தலைமைச் […]
நெல்லையில் இளம்பெண் ஆணவ கொலை?- காதலன் புகார்
நெல்லை பேட்டை அன்னதான விநாயகர் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பட்சிராஜன். இவரது மகள் சிவமதி (வயது 19). இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சிவமதி மாற்று சமூகத்தைச் சார்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் இவர்களது குடும்பத்தினருக்கு தெரிய வந்திருக்கிறது. சிவமதி குடும்பத்தினர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வாலிபரையும் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இருந்த போதிலும் இருவரும் காதலை கைவிடாததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சிவமதி […]
நெல்லை: பாஜக பிரமுகர் வீட்டில் மூதாட்டியைக் கட்டிப்போட்டு ரூ.26 லட்சம் கொள்ளை
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பொன்விழா நகரைச் சேர்ந்தவர் சன்னியாசி. பாஜக மாவட்ட வர்த்தகப் பிரிவு அணிச் செயலாளர். இவர், சென்னையில் தங்கி நிதி நிறுவனம் (பைனான்ஸ்) நடத்தி வருகிறார். சுத்தமல்லியில் உள்ள இவரது வீட்டில் மாமனார் மாரி மற்றும் மாமியார் ஆண்டிச்சி (70) ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த 8-ம் தேதி காலை, மாரி பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்குவதற்காக சீவலப்பேரிக்குச் சென்றிருந்த நிலையில், ஆண்டிச்சி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மதியம் 2 மணியளவில் […]
குற்றால அருவியில் வௌ்ளபெருக்கு… சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
நெல்லை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் யாரும் குற்றால அருவிக்கு செல்ல முடியாதபடி கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குற்றால அருவிகளில் நேற்றிரவு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு சற்று குறைந்தாலும், அதிகளவில் தண்ணீர் விழுவதால் பாதுகாப்பு கருதி குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது. ஆங்கில புத்தாண்டு பிறப்பு மழையுடன் தொடங்கியது. சென்னையில் நேற்று முன்தினம் […]
நெல்லையில் டிச.,20,21ல் முதல்வர் சுற்றுப்பயணம்.. அமைச்சர் கே.என்.நேரு
நெல்லையில் டிச.20, 21ல் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு பேட்டி அளித்துள்ளார். நெல்லையில் டிச.21ம் தேதி 44,900 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்குகிறார். ரூ.356 கோடியில் திட்டங்கள், ரூ.110 கோடி மதிப்பில் நூலகழ் அமைக்கும் பணியை தொடங்கி வைக்கிறார் முதல்வர். மழைக்காலம் முடிந்தது சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
பிரபல சீரியல் நடிகர் தினேஷ் கைது
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தண்டையார்குளத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் அளித்த புகாரில், அரசு வேலை வாங்கி தருவதாக சீரியல் நடிகர் தினேஷ் கடந்த 2022-ல் ரூ.3 லட்சம் பெற்றார். ஆனால் அரசு வேலை வாங்கி தரவில்லை. பணத்தை கேட்டபோது கொடுக்காமல் அலைக்கழித்ததுடன் தன்னை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் நடிகர் தினேஷை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த வாலிபர் பலி
நெல்லை மாவட்டம், வள்ளியூரில் நாய் கடித்து ரேபிஸ் பாதித்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.