அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்… 11 பேர் பலி…
சிவகங்கை திருப்பத்தூர் – பிள்ளையார்பட்டி சாலையில் இரு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் சென்ற பேருந்தும் காரைக்குடி நோக்கி சென்ற பேருத்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழத்துள்ளதாகவும், 40 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பலர் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். […]