நைஜீரியாவில் பயங்கரம்: லாரி கவிழ்ந்து 30 பேர் சம்பவ இடத்திலேயே பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் கானோ மாகாணம், குவானர் பார்டே நகரில் உள்ள நெடுஞ்சாலையில், பல பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு டிரெய்லர் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் லாரியில் பயணம் செய்த 30 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர், படுகாயமடைந்த பலரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் […]

நைஜீரியாவில் பயங்கரம்: துப்பாக்கி முனையில் 150 பேர் கடத்தல்

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், பயங்கரவாத அமைப்புகள் மற்றும் ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடூனா மாகாணம் கஜூரா பகுதியில் உள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டிற்காக மக்கள் கூடியிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கிகளுடன் புகுந்த மர்ம கும்பல், வழிபாட்டில் இருந்த 150 பேரைத் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள அந்நாட்டு போலீசார், கடத்தப்பட்டவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். […]

கிராமத்திற்குள் புகுந்து தாக்குதல்: நைஜீரியாவில் 30 பேர் பலி

நைஜீரியா நாட்டின் வடக்கே நைஜர் மாகாணத்தில் உள்ள கசுவான்-தாஜி கிராமத்திற்குள் துப்பாக்கி ஏந்திய சிலர் திடீரென புகுந்து கிராம மக்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தினர். அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அந்த பகுதியிலுள்ள உள்ளூர் சந்தை மற்றும் பல வீடுகளை இடித்து தள்ளி சேதப்படுத்தியும் சென்றனர். இதில், குறைந்தது கிராமவாசிகள் 30 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். தவிரவும் பலர் கடத்தப்பட்டு உள்ளனர் என போலீசார் இன்று தெரிவித்தனர். எனினும் இந்த எண்ணிக்கையை உள்ளூர்வாசிகள் 37 […]