பச்சை கடல் ஆமைகளை வேட்டையாடிய 4 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே அரசால் பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்டுள்ள பச்சை கடல் ஆமைகளை வேட்டையாடி, அதன் இறைச்சியைக் கடத்த முயன்ற 4 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கீழக்கரை வனஉயிரின சரக அலுவலர் கௌசிகா தலைமையில் வனவர் காளிதாஸ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று கடலோரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கீழக்கரை அப்பாத்தீவு அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு படகில் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் […]