“அரசன்” படத்தில் இணைந்த விஜய் சேதுபதி!
தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சிம்பு (சிலம்பரசன் டி.ஆர்) நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “அரசன்”. இப்படத்தை கலைப்புலி எஸ். தானு தயாரிக்க, இசை அமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது மற்றொரு மிகப்பெரிய சர்ப்ரைஸ் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், “மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இன்று, அதிகாரப்பூர்வ போஸ்டருடன் வெளியான அறிவிப்பில் “மனிதம் இணைகிறது… […]