காரைக்கால் திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா- பந்தல்கால் நடும் விழா
உலக புகழ்பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு மார்ச் 06 தேதி காலை 08.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான பந்தல்கால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது. முன்னதாக பந்த காலுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. […]