பனிப்பொழிவு: ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து

மோசமான வானிலை மற்றும் தொடர்ச்சியான பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இன்று அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக காஷ்மீருக்கு வரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானப் போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ளது. தற்போதைய வானிலை இன்று மாலை வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், பயணிகள் தங்கள் விமான பயண மாற்றங்கள் குறித்து சம்பந்தப்பட்ட […]

பனிப்பொழிவு-பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

கோவையில் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விலை கிடு , கிடு என உயர்ந்து காணப்பட்டது. மல்லிகை கிலோ ரூபாய் 2 ஆயிரத்திற்கு விற்பனையானது. கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் வெயில் நிலவுவதாலும், இரவில் பனிப்பொழிவு காணப்படுவதாலும், பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக மல்லிகை மற்றும் முல்லை பூக்கள் மலரும் முன்பே பனியால் கருகி விடுகிறது. இதனால் பூக்களின் உற்பத்தி குறைந்ததால் விலை அதிகரித்து காணப்படுகிறது. இது தவிர தற்பொழுது […]