டியூட்’ படத்தில் இளையராஜா பாடலை நீக்க கோர்ட் உத்தரவு
தீபாவளிக்கு வெளியான டியூட் (Dude) திரைப்படத்தில் தன்னுடைய இசையமைப்பில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘கருத்த மச்சான்’ மற்றும் பணக்காரன் படத்தில் இடம்பெற்றிருந்த ‘100 வருஷம் இந்த மாப்பிள்ளைக்கு’ பாடல்கள் தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், படத்தில் இடம்பெற்றுள்ள இந்த இரண்டு பாடல்களையும் நீக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கானது நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. […]