2 மகள்களை கொன்று தாய் தற்கொலை- உருக்கமான கடிதம்..பரிதாபம்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புத்தூர் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சிவசங்கர், ஸ்ரீசிட்டி தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்கிறார். இவரது மனைவி பத்மா(32). இவர்கள் 2 பேரும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தனர். இவர்களது மகள்கள் தேஜாஸ்ரீ(7), லாஸ்யா(5). இந்நிலையில் சிவசங்கர் சரியாக வேலைக்கு செல்லவில்லையாம். இதனால் குடும்ப செலவுக்கு பணம் தரவில்லை என தெரிகிறது. இதனால் வேதனையடைந்த பத்மா, நேற்றுமுன்தினம் […]

தெரு நாய்கள் கடித்து 35 ஆடுகள் பலி.. பரிதாபம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஞானிபாளையத்தில் தெரு நாய்கள் கடித்ததில் பழனிசாமி என்பவரின் 15 ஆடுகள் பலியாகின. சங்கரன்கோவில் அருகே ஆலடிப்பட்டி கிராமத்தில் நாய்கள் கடித்ததில் 20 ஆடுகள் உயிரிழந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி சுற்றுச்சுவரில் டூவீலர் மோதி 2 வாலிபர்கள் பலி..பரிதாபம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி காவல் நிலையம் அருகே இன்று அதிகாலை நடைபெற்ற விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் கட்டுப்பாட்டை இழந்து பள்ளிச் சுவரில் மோதி உயிரிழந்தனர். நாமக்கல் அருகே உள்ள மறவாபாளையத்தைச் சேர்ந்த பிரவீன் (19) மற்றும் அவரது நண்பர் கார்த்தி (19). இவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பரமத்தி வேலூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். பரமத்தி காவல் நிலையம் அருகே […]

அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பலி- திருச்சியில் பரிதாபம்

திருச்சி, உறையூர் தாத்தையாங்கார்ரோடு மருதப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி (65). இவர் நேற்று மாலைதிருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பஸ் ஸ்டாண்ட் அருகில் சாலையில் நடந்து கொண்டு இருந்தார். அப்பொழுது அவரை பின் தொடர்ந்து வந்த மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்ற அரசு பேருந்து எதிர்பாராதமாக ராஜலட்சுமி மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் முன் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி ராஜலட்சுமி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கண்டோன்மென்ட் […]

பால் டேங்கர் லாரி மோதி 7 மாடுகள் பலி-பரிதாபம்

விருதுநகர், காரியாபட்டி அருகே முடுக்கன்குளத்தில் பால் டேங்கர் லாரி மோதி 7 மாடுகள் உயிரிழந்துள்ளது. கூட்டமாக சென்று கொண்டிருந்த மாடுகள் மீது பால் டேங்கர் லாரி தாறுமாறாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 7 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 5க்கும் மேற்பட்ட மாடுகள் படுகாயமடைந்துள்ளது.

கார் மோதி 2 விவசாயிகள் பலி- பரிதாபம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வாகரை பகுதியில், அதிவேகமாக வந்த கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு முதிய விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். வாகரை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வேலுச்சாமி (62) மற்றும் கருப்புசாமி (62). சம்பவம்: இவர்கள் இருவரும் இன்று மதியம் ஒரு வேலையாகத் தங்களது இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம் – தாராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று, எதிர்பாராத விதமாக இவர்களது […]

கணவன் கண்முன்னே பஸ்சில் சிக்கி மனைவி பலி.. பரிதாபம்

கோவை NH சாலை மரக்கடை பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக். இவர் தனது மனைவி ராபியத்துல் பஷிரியாவுடன் நேற்று மாலை கோவை பாலக்காடு சாலை சுண்ணாம்புகாளவாய் வழியாக குனியமுத்தூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக பயணிகளை ஏற்றி மதுக்கரை நோக்கி அதிவேகமாக சென்ற கோகுலம் என்ற தனியார் பேருந்து, இருசக்கர வாகணத்தின் பக்கவாட்டில் மோதியதில் கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பயனித்த ராபியத்துள் பஷிரியாவின் தலையில் ஏறியது. இதில் இருசக்கர வாகனத்தை […]

தனியார் வங்கி மேனேஜர் தற்கொலை… திருச்சியில் பரிதாபம்

திருச்சி ஏர்போர்ட் கல்யாணசுந்தர நகரை சேர்ந்த மகாலட்சுமி (22)என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (34) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இரு வீட்டாரின் பெற்றோரின் சம்மதத்துடன், மகாலட்சுமி கடந்த ஜூன் 8-ந் தேதியன்று மணிகண்டனைத் திருமணம் செய்துகொண்டார். பிறகு மணிகண்டன் கே.கே. நகரில் உள்ள தனியார் வங்கியில் ரிலேஷன்ஷிப் மேனேஜராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் மணிகண்டன் தனது திருமணம் மற்றும் வீட்டுப் புனரமைப்புக்காகக் கடன் வாங்கியிருந்தார். பிறகு மணிகண்டனால் கடன் வாங்கியத்திற்கு மாதாந்திரத் […]

SIR பணி ஊழியர் மாரடைப்பால் பலி… தூத்துக்குடியில் பரிதாபம்

தமிழ்நாடு மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) நடந்து வருகின்றன. குறுகிய காலத்தில் SIR பணிகளை முடிக்க வேண்டிய அழுத்தத்தால் தேர்தல் அலுவலர்கள் மற்றும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் திடீர் மரணமும், தற்கொலையும் நாடு முழுவதும் தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில் தூத்துக்குடியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வந்த சரவணன் (வயது 35) நேற்று காலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, […]