பறவை காய்ச்சல் பரவல்- பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்
சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான காகங்கள் இறந்து கிடந்த நிலையில், அவற்றுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பறவைக் காய்ச்சல் எனும் (AH5N1) இன்ஃபுளுயன்சா என்பது பறவைகளுக்கு வரும் நோய். இது, பெரும்பாலும் காட்டில் வசிக்கும் பறவைகள் மத்தியில் பரவக்கூடிய ஒரு வைரஸ். ஆனாலும், வளர்ப்புக் கோழிகள், பிற பறவை மற்றும் விலங்குகளையும் இந்த வைரஸ் தாக்கும். இந்த வைரஸ்களால் மனிதர்களுக்கும் நோய் […]
பறவை காய்ச்சல் பரவவில்லை… தமிழக சுகாதாரத்துறை
பறவைகளிடமிருந்து மனிதருக்கு தற்போதுவரை பறவை காய்ச்சல் பரவவில்லை என்று தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. பறவை காய்ச்சலுக்கான டானிக் ப்ளூ தடுப்பு மருந்து, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கையிருப்பில் உள்ளது என்றும் கோழி, சேவல், கொக்கு, நாரை, புறா,வாத்து உள்ளிட்ட உணவு பறவைகளிலிருந்து பரவ வாய்ப்பு உள்ளது என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பறவை காய்ச்சல் எதிரொலி…தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு
கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலியாக தமிழக, கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக எல்லை மாவட்டங்களில் சோதனைச் சாவடிகளில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்து, கிருமிநாசினிகள் தெளிக்கவும் தமிழக சுகாதாரத்துறை ஆணையிட்டுள்ளது. காய்ச்சல் பாதித்த பகுதிகளில் கோழி, காடை இறைச்சி, முட்டை ஆகியவை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வளர்த்து வந்த […]