எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதுக்கி வைத்திருந்த 355 யுனிட் மணல் பறிமுதல்
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த மணலை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் அமைச்சர் எம் ஆர் விஜய பாஸ்கர் புதிய வீடு கட்டி வருகிறார் அதற்காக அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக ஆற்று மணலை கொட்டி வைத்திருந்ததாக விஏஓ அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து, நேற்று தனபால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் 320 யூனிட் ஆற்று மணலை பறிமுதல் செய்தனர். அதேபோல் […]
மக்கள் குறைதீர் கூட்டம்-பொதுமக்களிடம் கத்தி-புகையிலை பொருட்கள் பறிமுதல்
கோவை: மக்கள் குறை தீர்ப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் எடுத்து வந்த கத்தி, புகையிலை பொருட்கள், ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வாரம்தோறும் திங்கட்கிழமை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும். இன்றைய தினம் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொள்வர். அதன்படி இன்றும் சோதனை செய்த பொழுது சில பொதுமக்கள் கத்தி, புகையிலை பொருட்கள், தீப்பெட்டி, பூச்சிக்கொல்லி, இருசக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தும் ரசாயன பொருட்கள், ஆகியவற்றை எடுத்து வந்துள்ளனர். பெண்கள் சிலர் […]
சென்னை ஏர்போட்டில் உயர் ரக கஞ்சா பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூ.23 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்தனர். தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் கடத்திவரப்பட்ட 23 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறை பறிமுதல் செய்தது. பதப்படுத்தப்பட்ட உணவு பொருள், சாக்லெட் பாக்கெட்டுகளுக்குள் மறைத்து கடத்தி வந்த கஞ்சாவை சுங்கத்துறை கைப்பற்றினர். கஞ்சாவை கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த 6 இளைஞர்களை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு ரூ.15 கோடி மதிப்புள்ள 15 […]
கோவையிலிருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல்
கோவையில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 30 பண்டல்கள் வேட்டி மற்றும் 25 பண்டல்கள் சேலை, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. வாகன ஓட்டுனர் கிரி, வேட்டி, சேலையை விற்பனைக்காக கொண்டு வந்த சந்தோஷ், அதனை வாங்கிய சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளனர். விலையில்லா வேட்டி, சேலைகள் எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
கேட்பாரற்று நின்ற 18 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
திருச்சி மாநகரம் உறையூர் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு போலீசார் நேற்று (ஜனவரி 29) தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, உறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட நாட்களாக பொது இடங்களில் கேட்பாரற்று நின்றிருந்த 18 இருசக்கர வாகனங்களை போலீசார் கண்டறிந்தனர். அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தியும் உரிய தகவல்கள் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, அந்த 18 இருசக்கர வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்த உறையூர் […]
அரசு பஸ்சில் கடத்திய ரூ.10 கோடி தங்கக்கட்டிகள் பறிமுதல்..
கேரளாவில் இருந்து கோவையை நோக்கி வந்த தமிழக அரசு பேருந்தை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். கேரளாவில் இருந்து வரும் பயணிகள் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் கொண்டு வரப்படுகின்றதா? என்று சோதனை நடந்தது. அப்போது, அதில் ஒரு நபர் சந்தேகப்படும் வகையில், பெரிய பேக்குடன் அமர்ந்திருந்தார். அந்த பேக்கை திறந்து போலீசார் சோதனை செய்தபோது அதில் தங்கக்கட்டிகள் இருப்பது தெரியவந்தது. போலீசார் விசாரணையில், தங்க கட்டிகளை கடத்தி வந்தது கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்த […]
ராஜஸ்தானில் 10,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்.. ஒருவர் கைது
ராஜஸ்தானில் பத்தாயிரம் கிலோ வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் நாகர் மாவட்டத்தில் உள்ள ஹர்சோர் கிராமத்தில், நேற்று நள்ளிரவில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஆளில்லாத பண்ணை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10,000 கிலோ வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் 187 பைகளில் நிரப்பப்பட்ட 9,550 கிலோ அம்மோனியம் நைட்ரேட், 9 பெட்டிகள் டெட்டனேட்டர்கள் மற்றும் 24 பெட்டிகள் ஃப்யூஸ் வயர்கள் இருந்தன. மேலும் குண்டு வெடிக்கச் […]
கோவை-130 கிராம் மெத்தாம்பெட்டமைன் பறிமுதல்.. 5 பேர் கைது
கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் உத்தரவின்பேரில், உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில், கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேகத்திற்குரிய ஒரு நான்கு சக்கர வாகனம் இடைமறித்து சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனையில், அந்த காரில் பயணம் செய்த 5 நபர்களிடமிருந்து 130 கிராம் மெத்தாம்பெட்டமைன் / MDMA வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. விசாரணையில்,அந்த நபர்கள் வெளிமாநிலத்திலிருந்து போதைப்பொருளை […]
புனேவிலிருந்து கோவைக்கு கடத்திய 1,470 போதை மாத்திரைகள் பறிமுதல்
கோவை, உக்கடம் போலீசார் சுங்கம் பைபாஸ் சாலை மின்சார வாரிய அலுவலகம் அருகே ரோந்து சென்றனர். அப்பொழுது அங்கு சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர், அதில் அவர் கோவை புதூரைச் சேர்ந்த முகமது தாரிக் என்பதும், அவர் போதை மாத்திரை விற்பனை செய்வதும் தெரிய வந்தது. உடனே போலீசார் அந்த நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1,470 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள மருந்து […]
திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல்
டெல்லியில் சமீபத்தில் செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு நாடு முழுவதும் காவல்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் வெடிப்பொருட்கள் மற்றும் மருந்துகள் விற்பனை செய்வதற்கு உரிமம் பெற்ற கடைகள் மற்றும் குடோன்களில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் நடத்திய சோதனையின்போது, 2 கடைகளில் சல்பர், போட்டாசியம் நைட்ரேட் உள்ளிட்ட வெடி மருந்துகள் உரிமம் புதுப்பிக்கப்படாமல் விற்பனைக்கு […]