அதிமுக மாஜி ஓட்டல் திறப்பு- மின்சாரம் தாக்கி திருச்சி மாணவர் பலி

திருச்சி மாவட்டம், முசிறியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவிற்குச் சொந்தமான புதிய ஹோட்டல் திறப்பு விழா பணிகளின் போது, மின்சாரம் தாக்கி விழுந்த ஐ.டி.ஐ மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் முசிறியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் புதிதாக ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி கட்டியுள்ளார். இதன் திறப்பு விழா வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். இந்த நிலையில் […]

போட்டி போட்டு பீர் குடித்த 2 இன்ஜினியர்கள் பலி-ஆந்திராவில் சோகம்

ஆந்திராவில் பந்தயம் போட்டு 19 பாட்டில் பீர் குடித்த 2 மென் பொறியாளர்கள் உயிரிழந்தனர். அன்னமய்யா மாவட்டம், பண்டவாரி கிராமத்தைச் சேர்ந்த மணிகுமார் (35), புஷ்பராஜ்(27) உயிரிழந்தனர். சங்கராந்தி விடுமுறையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் வந்த நண்பர்களின் விபரீத விளையாட்டால் உயிரிழந்தனர்.

மாஸ்கோவில் கார் குண்டு வெடிப்பு… ரஷிய ஜெனரல் பலி

ரஷிய ராணுவத்தின் உயர் அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் பனில் சர்வரோவ், மொஸ்கோவில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெனரல் பயணித்த காரில் பொருத்தப்பட்டிருந்ததாக கூறப்படும் குண்டு வெடிக்கச் செய்யப்பட்டு அவர் கொல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.ரஷிய பொது ஊழியர்களின் செயல்பாட்டு பயிற்சித் துறையின் தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பனில் சர்வரோவ் செயல்பட்டு வந்துள்ளார். இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், உக்ரைனிய உளவுத்துறை சேவைகள் சம்பந்தமாக இந்த […]

வெந்நீரில் விழுந்து 1½ வயது குழந்தை பலி

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா விஜயகிரி கிராமத்தை சேர்ந்தவர் பசப்பா. இவரது மனைவி ரம்யா. இந்த தம்பதிக்கு 1½ வயதில் பெண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் குழந்தையை குளிக்க வைப்பதற்காக ரம்யா வெந்நீர் வைத்துள்ளார். தண்ணீர் மிகவும் சூடாக இருந்துள்ளது.இதனால் கொதிக்கும் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதனை ரம்யா கழிவறை அருகே வைத்துவிட்டு வீட்டுக்குள் துண்டை எடுக்க சென்றார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, வெந்நீர் இருந்த பாத்திரத்தின் அருகில் […]

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

தூத்துக்குடி தாளமுத்துநகர் வடக்கு சோட்டையன்தோப்பு தெருவைச் சேர்ந்த முருகன் மகன் ஹரி (21), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் முள்ளக்காடு சந்தோஷ்நகரில் ஒரு புதிய வீடு கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள மின்சார மோட்டாரை தூக்கும்போது அதிலிருந்து மின்சாரம் தாக்கியுள்ளது.இதில் பலத்த காயம் அடைந்த அவரை முள்ளக்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் […]

சபரிமலையில் மேலும் ஒரு பக்தர் பலி

புகழ்பெற்ற சபரிமலையில் 2025 2026 ஆண்டுக்கான மண்டல மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட முதல் இரண்டு மூன்று நாட்கள் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகமாக இருந்த காரணத்தினால் சுவாமி தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளானார்கள். இதற்கிடையே தேவசம்போர்டு கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையை அதிரடியாக குறைத்தது தினமும் 20,000 என்ற எண்ணிக்கையை 5 ஆயிரம் ஆக குறைத்தது இதனால் தினமும் 90 […]

சுவர் இடிந்து பள்ளி மாணவன் பலி.. தலைமையாசிரியர் மீது வழக்கு

திருத்தணி அருகே பள்ளியில் சுவர் விழுந்து மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள ஆர்.கே. பேட்டை தாலுகா, கொண்டாபுரம் அரசு உயர் நிலைப் பள்ளியில் மோகித் என்ற மாணவன் ஏழாம் வகுப்பு பயின்று வந்தார். இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற போது பள்ளிக் கட்டடத்தின் கைப்பிடி சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் மாணவர் படுகாயமடைந்தார். உடனடியாக அங்கிருந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் […]

ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி…தேனீக்கள் கொட்டி பலி…

உத்தரபிரதேசம் ஏட்டா மாவட்டம் கிராதாபாத் கிராமத்தை சேர்ந்தவர் அட்டர் சிங் (62). இவர் உத்தரபிரதேச காவல்துறையில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். பணி ஓய்வுக்குப்பின் அட்டர் சிங் தனது மகன்களுடன் கிராதாபாத் கிராமத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், அட்டர் சிங் இன்று தனது 2 மகன்களுடன் கிராமத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது தோட்டத்தில் இருந்த தேனீக்கள் தீடிரென அட்டர் சிங் மற்றும் 2 மகன்களை சரமாரியாக கொட்டியது. தேனீக்கள் தாக்குதலில் இருந்து […]

வாளி தண்ணீரில் மூழ்கி 2வயது குழந்தை பலி..

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 2வயது குழந்தை வாளி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. வாளி தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கிய குழந்தையை மீட்டு தாய் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ரயிலில் அடிப்பட்டு நர்சிங் மாணவர்-மாணவி பலி- பரிதாபம்

பெங்களூரு சிக்கபானவரா ரெயில் நிலையத்தின் அருகே இளம்பெண், வாலிபர் பிணமாக கிடந்தனர். அவர்கள் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் யஷ்வந்தபுரம் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது 2 பேரும் பெலகாவியில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த வந்தே பாரத் ரெயிலில் அடிபட்டு பலியானது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். […]

வினையான விளையாட்டு-தொட்டில் சேலை இறுக்கி 8ம் வகுப்பு மாணவன் பலி

திருவள்ளூரை சேர்ந்தவர் சதீஷ் (41 வயது). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மீனா (38). இவர்களுக்கு பவ்யஸ்ரீ (15 ) என்ற மகளும், ஹரிஹரன் (13) என்ற மகனும் இருந்தனர். பவ்யஸ்ரீ, தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். ஹரிஹரன், 8-ம் வகுப்பு படித்து வந்தார். மீனாவின் உறவினரான ஆந்திராவை சேர்ந்த நந்தினி என்பவர் பிரசவத்துக்காக சில தினங்களுக்கு முன்பு சதீஷ் வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார். இதனால் குழந்தைக்காக வீட்டின் மாடியில் உள்ள படுக்கை […]

ஏர் உழும்போது மின்சாரம் பாய்ந்து… 2 காளை மாடுகள் பலி…

திருத்தணி அருகே வீரகநல்லூர், சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (55). விவசாயி. இவர், அதே பகுதியை சேர்ந்த வெங்கடரத்தினம் என்ற விவசாயியின் நிலத்தில் இன்று காலை உழவு பணியில் ஈடுபடுவதற்காக தனது 2 காளை மாடுகளை ஓட்டி சென்றார். பின்னர் ஏர் கலப்பையில் 2 மாடுகளை பூட்டி நிலத்தை உழுது கொண்டிருந்தபோது வயல்வெளியை ஒட்டியிருந்த மின்கம்பத்தின் உள்ள கம்பியில் 2 காளை மாடுகளும் உரசியபடி சென்றன. இதில் திடீரென மின்சாரம் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே 2 மாடுகளும் […]

பஸ்-டீசல் லாரி மோதி விபத்து… 42 பேர் உடல் கருகி பலி

சவுதி அரேபியாவின் மதீனா அருகே பஸ்-டீசல் லாரி மோதி விபத்துக்குள்ளானது. மெக்காவில் இருந்து மதீனாவிற்கு உம்ரா புனித பயணிகள் சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் பஸ்சில் தீப்பற்றியது. இதில் பஸ்சில் பயணித்த இந்தியர்கள் 42 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதில், ஐதராபாத்தை சேர்ந்த 20 பெண்கள், 11 குழ ந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. மற்ற உடல்களை அடையாளம் காணும் நடந்து வருகிறது. இது தொடர்பாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு […]

குழந்தை மாதிரி வளர்த்த கன்றுக்குட்டி.. சிறுத்தை தாக்கி பலி.. விவசாய குடும்பம் வேதனை

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை குப்புச்சி புதூரில் கடந்த மாதம் 27ம் தேதி வனப்பகுதி விட்டு வெளியே வந்த சிறுத்தை அப்பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்தில் கன்று குட்டி, கிடா ஆடு தாக்கிக் கொன்றது.அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் வனத்துறையினர் தனியார் தோட்டங்களில் இரண்டு கூண்டுகள் வைத்து சிசிடிவி கேமரா மற்றும் வனத்துறை கேமரா மூலம் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வந்த நிலையில் மீண்டும் சிறுத்தை நேற்று முன்தினம் இரவு சுமதி […]