கனமழை… 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
டிட்வா புயலின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அதிகாலை முதல் மிதமான முதல் கன மழை பெய்து வருகிறது. தொடர்ந்து புயல் சின்னம் அடுத்த 2 நாள்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், வரும் டிச. 3 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்தது. இதனிடையே சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை பெய்வதற்கான சிவப்பு நிற எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்தது. […]