நாளை தைப்பூசம்.. பழனி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைதிருக்கல்யாணம் இன்று நடைபெறுகிறது. மேலும் சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.இதில் கலந்துகொள்வதற்காக திண்டுக்கல், தாராபுரம், உடுமலை என பழனியின் அனைத்து சாலைகளிலும் பாதயாத்திரை பக்தர்கள் அணி அணியாய் நடந்து வந்தனர். அவ்வாறு வரும்போது களைப்பு தெரியாமல் இருக்க முருகனை வேண்டி சரண கோஷம் எழுப்பியும், பாட்டு பாடியும் ஆடி வந்தனர். பழனி வந்த பின்பு […]