தேர்தலில் போட்டியிட பாமக இன்று முதல் விருப்பமனு
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) இன்று முதல் விருப்பமனுக்களைப் பெறத் தொடங்கியுள்ளது. பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, விருப்பமனு விநியோகம் மற்றும் கட்டண விவரங்கள் பின்வருமாறு:விவரம்கட்டண விவரம்பொதுத் தொகுதியில் போட்டியிட₹1,000தனித் தொகுதி மற்றும் பெண்களுக்கு₹500காலக்கெடு: விருப்பமனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க ஜனவரி 12, 2026 (திங்கட்கிழமை) கடைசி நாளாகும்.பெறப்படும் இடம்: தைலாபுரம் தோட்டம் அல்லது கட்சியின் முக்கிய மாவட்ட அலுவலகங்களில் […]
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி தரப்பு அறிவிப்பு
பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவாளராக செயல்பட்டு வரும் ஜி.கே.மணியை கட்சியில் இருந்து நீக்கி அன்புமணி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. ஜி.கே.மணி அவர்கள் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருவதால், அதற்காக கட்சியின் அமைப்பு விதி 30&இன்படி அடிப்படை உறுப்பினரில் இருந்து அவரை ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி […]
சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டம்.. தவெகவுக்கு அழைப்பு விடுத்த பாமக
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி டிசம்பர் 17 அன்று நடைபெறவுள்ள மாநில அளவிலான போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பங்கேற்குமாறு பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) அழைப்பு விடுத்துள்ளது. இன்று பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் வந்து அழைப்புக் கடிதத்தை வழங்கினர். இது 2026 தேர்தலுக்கு முன்னதாக இரு கட்சிகளுக்கும் இடையே சாத்தியமான கூட்டணி யூகங்களை தூண்டியுள்ளது.பாலு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் […]
டிச.,14 முதல் பாமக விருப்ப மனு விநியோகம்
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட பாமக தரப்பில் டிசம்பர் 14ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். டிசம்பர் 20ம் தேதி வரை விருப்ப மனுக்களை பாமகவினர் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிய அன்புமணி, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பனையூர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. ஏற்கனவே பல்வேறு […]