பாம்பை கடிக்க வைத்து தந்தை கொலை…ரூ.2.50 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக மகன்கள் நடத்திய நாடகம்
திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்தவர் கணேசன்(56). இவர், பொதட்டூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில், ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த அக்.22ம் தேதி அவரது வீட்டு குளியலறையில் பாம்பு கடித்து இறந்து கிடந்தார். பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், கணேசனின் மகன்கள் மோகன்ராஜ், அரிஹரன் ஆகியோர், இரு காப்பீட்டு நிறுவனங்களில் தந்தையின் பெயரில் காப்பீடு செய்யப்பட்டிருந்த பணத்தை கோரி விண்ணப்பித்தனர். கணேசனின் மரணம் குறித்து விசாரணையில் ஈடுபட்ட காப்பீட்டு நிறுவனம், அவரது […]