கரூர் பாலசுப்ரமணிய கோவில் நில பிரச்னை- 500க்கும் மேற்பட்டோர் தர்ணா
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோர் கோவில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 200 க்கும் மேற்ப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அறநிலையத்துறை இணை ஆணையர் ரமணிகாந்தன் தலைமையிலான அதிகாரிகள் கோயில் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கண்ணம்மாள் என்பவரின் வீடு 62 […]