ஜெயங்கொண்டம் அருகே பிரகதீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோயில் இன்று மாலை நடைபெறும் அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு, தற்போது லிங்கத் திருமேனிக்கு அன்னம் சாத்துவதற்காக சாதம் வடிக்கும் பணிகள் பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. கங்கை வரை படையெடுத்து, கடாரத்தை வென்று அங்கு வெற்றி பெற்றதன் அடையாளமாக கங்கைகொண்ட சோழபுரம் என்னும் மாநகரை மாமன்னன் ராஜேந்திர […]