சேலத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் கூட்டம் நடத்த அனுமதி கோரி, தவெக மத்திய மாவட்டச் செயலாளர் தமிழன் ஆ.பாா்த்திபன் தலைமையில் த.வெ.க. நிர்வாகிகள், காவல் ஆணையர் அனில்குமார் கிரியிடம் கடந்த புதன்கிழமை மனு அளித்தனர். ஆனால், அரசு வழிகாட்டுதல்படி வழிமுறைகள் குறிப்பிடப்படவில்லை என்று தெரித்து அந்த மனு காவல் துறை சார்பில் நிராகரிக்கப்பட்டது. முன்னதாக, சேலம் மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள காளிகவுண்டம்பாளையம் பகுதி திடலில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு […]

எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரக் கூட்டம்… மயங்கி விழுந்தவர் சாவு…

ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கொண்டையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 43 வயதான அர்ஜுனன், பிரச்சார கூட்டத்திற்கு இடையே நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.