யாரும் இங்கே எடுத்த உடனே வந்துவிட முடியாது! பிரேமலதா ஓபன் டாக்..

 தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற “மக்களைத் தேடி மக்கள் தலைவர்” நிகழ்ச்சியில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக வலுவான கூட்டணி அமைத்து வெற்றி பெறும் என உறுதியாக அறிவித்தார். காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பெரியார் சிலை பகுதியிலிருந்து ரோட் ஷோவுடன் அவர் வரவேற்பைப் பெற்றார். பிரேமலதா, “2026 தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியே அமையும். தேமுதிக இடம்பெறும் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும். […]