ஓபிஎஸ்-க்கு டிடிவி பிறந்தநாள் வாழ்த்து

டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-முன்னாள் முதல்-அமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளருமான அன்பிற்குரிய நண்பரும், சகோதரருமாகிய ஓ.பன்னீர்செல்வத்துக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.ஓ.பன்னீர்செல்வம் நீண்ட ஆயுளோடும், பூரண உடல்நலத்தோடும் தொடர்ந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனிமொழிக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி, இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.  இந்த நிலையில்,திமுக எம்.பி. கனிமொழிக்கு தவெக தலைவர் விஜய் தொலைபேசி மூலம் பிறந்த‌நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி’ என கூறிவரும் நிலையில் கனிமொழிக்கு விஜய் பிறந்த நாள் கூறியது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

சோனியா காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் முதல்வர் ஸ்டாலின் X-தளபதிவில் கூறியதாவது… காங்கிரஸ் பாராளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது வாழ்க்கை, தியாகம், தன்னலமற்ற பொதுப் பயணம் மற்றும் மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கான உறுதியை சோனியாவின் வாழ்க்கை பிரதிபலிக்கிறது. முற்போக்கான மற்றும் […]

உதயநிதி பிறந்தநாள்… முத்தம் கொடுத்து வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று(நவம்பர் 27) தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் உதயநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் முத்தம் கொடுத்து வாழ்த்தினார். இதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன் என தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “கொள்கைப் பற்றோடு உழைப்பிலும் உயர்ந்து வரும் உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! இளைஞரணிச் செயலாளராக – விளையாட்டுத் துறை அமைச்சராக – மாண்புமிகு துணை முதலமைச்சராக நீ […]

மேதகு பிரபாகரன் பிறந்தநாள்.. கோவையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

மேதகு பிரபாகரன் 71-வது பிறந்தநாளை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சார்பில் கேக் வெட்டி பட்டாசு வெடித்து கொண்டாட்டம். கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகம் முன்பு தமிழீழ விடுதலை தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் 71-வது பிறந்தநாளை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கேக் வெட்டியும் பட்டாசு வெடித்தும் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடினர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கு.ராமகிருட்ணன்:-மேதகு பிரபாகரன் தமிழர்களை உலகம் முழுவதும் அறிய செய்தவர் என்றும் இலட்சியத்திற்காக 15 வயதில் போர் தொடங்கி […]

கரூரில் சிலம்பம் போட்டி.. VSB தொடங்கி வைத்தார்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அளவிலான பெண்களுக்கான சிலம்ப போட்டியை இன்று முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். நாளை ஆண்களுக்கான சிலம்பப் போட்டி நடைபெற உள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிலம்பப் போட்டியில் 14,17,19 வயது மற்றும் பொது பிரிவாக போட்டிகள் நடைபெற உள்ளது முதல் பரிசு 25 […]