புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை (SIR) தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே தேர்தல் முடிந்த பீகாரிலும் இந்தப் பணிகள் நடைபெற்றன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து, தமிழகம் உட்பட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த மாதம் 4 ஆம் தேதி முதல் இந்த சிறப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLO) இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். வாக்காளர்கள் பூர்த்தி செய்து அளித்த விண்ணப்பங்களை, […]

மதிய உணவில் விபரீதம்: 70 மாணவர்கள் பாதிப்பு

பீகார் மாநிலம் மதேபுரா மாவட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று (07-02-2026) மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவர்கள் திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, பல குழந்தைகளுக்கு அடுத்தடுத்து வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. சில நிமிடங்களில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் பள்ளி வளாகத்தில் பெரும் பீதி நிலவியது. பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்களை வரவழைத்து, பாதிக்கப்பட்ட 70 […]

பீகார்- அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவர்கள் உடல்நலக்குறைவு

பீகார் மாநிலம் மதேபுரா மாவட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று(07-02-2026) மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளும் சதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பெரும்பாலான குழந்தைகளின் நிலை சீராக இருந்தபோதிலும், ஒரு சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதிய உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, பல குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டதுடன், வயிற்று வலி இருப்பதாகவும் புகார் […]

பீகார் அரசு ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி: சமூக வலைதளங்களுக்கு அனுமதி கட்டாயம்

பீகார் மாநில அரசு ஊழியர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் (X) போன்ற சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்க இனி உயரதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான புதிய கட்டுப்பாடுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய விதிகளின்படி, அரசு ஊழியர்கள் போலி கணக்குகளைப் பயன்படுத்தக் கூடாது. மேலும், ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் அரசின் இலச்சினை (Logo) அல்லது தங்களது அதிகாரப்பூர்வ பதவியைக் குறிப்பிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் […]

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டுல் (23) என்ற பெண்ணிற்கும், உத்தரபிரதேச மாநிலம் பர்சியா கிராமத்தைச் சேர்ந்த ரோகித் என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் 8-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு பட்டுல் தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், பட்டுலிடம் அவரது கணவர் ரோகித், மாமியார் சந்திரவதி தேவி, நாத்தனார் ரூபி தேவி மற்றும் அவரது கணவர் ஆகியோர் சேர்ந்து கூடுதல் வரதட்சணை கேட்டுத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகக் […]

அரசியலுக்கு வந்த ஒரே மாதத்தில் எம்எல்ஏ ஆன பாடகி மைதிலி தாக்கூர்

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025-இல், பிரபல மைதிலி பாடகர் மைதிலி தாக்கூர், பாஜகவின் சார்பில் அலிநகர் தொகுதியில் அழுத்தமான வெற்றி பெற்றுள்ளார். 25 வயதே ஆன இளம் பாடகர், கட்சியில் இணைந்து ஒரே மாதத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, 11,730 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்ஜேடி வேட்பாளர் பினோட் மிஷ்ராவைத் தோற்கடித்துள்ளார். அவர் 84,915 வாக்குகளைப் பெற்று, தொகுதியில் 49.05% வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்த வெற்றி, பாஜகவின் NDA கூட்டணியின் பெரும் வெற்றியில் ஒரு சிறப்பு அத்தியாயமாக அமைந்துள்ளது, மேலும் […]