திண்டுக்கல்-புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு-காளை முட்டி வீரர் பலி
திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் அலங்காநல்லூரை சேர்ந்த பாலகுரு படுகாயம் அடைந்தார். உடனடியாக காயமடைந்த அவரை அங்கிருந்த மருத்துவக் குழுவினர் மீட்டு உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தப் போட்டியில் பாலகுரு தவிர, மாடு பிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என மேலும் சிலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வழக்கமாக ஜல்லிக்கட்டு […]