இனி நோ அட்ஸ்.. ஆனா காசு! வாட்ஸ்அப்பில் புதிய கட்டண சேவையை அறிமுகம் செய்கிறது மெட்டா

உலக அளவில் தவிர்க்க முடியாத தகவல் தொடர்பு செயலியாக விளங்கும் வாட்ஸ்அப், தனது பயனர்களுக்கு விளம்பரம் இல்லா சேவையை வழங்க புதிய கட்டணத் திட்டத்தை (Subscription Plan) அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். வெறும் குறுஞ்செய்தி சேவையாகத் தொடங்கி, இன்று வீடியோ கால், கோப்புகள் பகிர்தல், ஸ்டேட்டஸ் எனப் பல்வேறு பரிமாணங்களை எட்டியுள்ள வாட்ஸ்அப், தொழில்நுட்ப உலகில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்துள்ளது. […]