எம்பி துரை வைகோ ஏற்பாடு- சவுதியில் இறந்த புதுகை வாலிபர் உடல் தமிழகம் வந்தது
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த அயலகத்தில் வேலை செய்து வந்த தேவராஜ் வேலு அங்கே திடீரென மரணமடைந்தார். இதுகுறித்து திருச்சி எம்பி மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதன் பேரில், அவரது உடலை தாயகம் கொண்டு வர உதவுவதற்காக உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் 11.02.2026 […]
புதுகையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் பொது வேலைநிறுத்த மறியல்
புதுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் முன்பு ஒன்றிய பா.ஜ.க.மோடி அரசின் நாசகாரதொழிலாளர் விரோத விவசாயிகள் விரோத சட்டங்களை முறியடிப்போம் என முழக்கமிட்டுதொ.மு.ச., சில.டி.யூ,ஏ.ஐ.டி.யூ.சி,ஏ.ஐ.சி.சி.யூ.,எஸ்.கே.எம் ஆகிய தொழிற்சங்ககூட்டமைப்பின்சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சாலையில் அமர்ந்து நடைபெற்ற மறியல்போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர்அ.ரெத்தினம் (தொ.மு.ச. ), மாவட்ட ஒருங்கிணைப்பாளர் த.செல்வராஜ் (எஸ்.கே.எம்) ஆகியோர் தலைமை வகித்தனர். மறியல் போராட்டத்தில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை சிறப்புரையாற்றினார். மறியல் போராட்டத்தில் ஏ.ஸ்ரீதர் ,முகமதலிசின்னா, (சி.ஐ.டி.யூ,) ப.ஜீவானந்தம் (ஏ.ஐ.டி.யூ.சி), கந்தசாமி (தொ.மு.ச.,) உள்ளிட்ட […]
புதுகை அருகே வேன் கவிழ்ந்து விபத்து… 3 குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயம்
புதுக்கோட்டை அருகே வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3குழந்தைகள் உள்ளிட்ட 22 பேர் படுகாயம் அடைந்தனர்.சென்னை காஞ்சிபுரத்தை சேர்ந்த 22 பேர், நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு காரைக்குடி செல்வதற்காக நேற்று காலை சுற்றுலா வேனில் புறப்பட்டனர். இந்த வேனை காஞ்சிபுரத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் ஓட்டினார். தஞ்சாவூர்- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அரியாணிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே பிற்பகல் 12 மணியளவில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை ஓர பள்ளத்தில் […]
புதுகை- பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
புதுக்கோட்டை மாவட்டம் , பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைபள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சண்முகம் வழிகாட்டுதலில்படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் ஆலோசனையின்படி தமிழ்நாடு மது விலக்கு ஆயத்தீர்வுத்துறை மற்றும் புதுக்கோட்டை ரூரல் டெவலப்மென்ட் ஆர்கனைசேஷன் (RDO) தொண்டு நிறுவனம் மூலமாக பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைபள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுக்கு அப்பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார்.ஆடிஒ தொண்டு நிறுவன திட்ட இயக்குனர் குழந்தைவேலு முன்னிலை வகித்தார். உதவி […]
புதுகையில் நகர்புற நலவாழ்வு மையம் திறப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் இன்று காணொளி காட்சி வாயிலாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ4,778.75 கோடி செலவிலான 183 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து 10 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் . அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தேர்வு நிலைப்பேரூராட்சி அமரகண்டான் வடகரையில் ரூ1.20கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்புற நல்வாழ்வு மையத்தினை திறந்து வைத்த நிகழ்ச்சியில் ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து […]
புதுகையில் தேமுதிக சார்பில் பேரறிஞர் அண்ணாவுக்கு மரியாதை
சுப்பிரமணியபுரத்தில் தேமுதிக சார்பில் பேரறிஞர் அண்ணாவுக்கு நினைவஞ்சலி. புதுக்கோட்டை பிப் 04-தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச் செயலாளர் ஆணைக்கிணங்க பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளையொட்டி அறந்தாங்கி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சுப்பிரமணியபுரத்தில் புதுக்கோட்டை தெற்குமாவட்ட செயலாளர் ஏ.சசிகுமார் தலைமையில் அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் பெரி.கலைஞர் அறந்தாங்கி தொகுதி பொறுப்பாளர் மாவட்ட அவைத் தலைவர் ஆவுடையார் கோவில் வி. மணிமுத்து , ஆலங்குடி தொகுதி பொறுப்பாளர் பழ.நேதாஜி சீனிவாசன், மணமேல்குடி ஒன்றிய செயலாளர் ஏ. […]
புதுகை- அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மரியாதை
புதுக்கோட்டையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57வது நினைவு தினத்தையொட்டிமாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் இருந்து வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் திமுகவினர் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு வந்து பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர் நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அரு.வீரமணி, மேயர் திலகவதிசெந்தில் ,முன்னாள் எம்.எல்.ஏக்கள் கவிதைப்பித்தன், கார்த்திக் தொண்டைமான் , சட்டமன்ற உறுப்பினர்வை.முத்துராஜா, துணைமேயர் லியாகத்தலி, மற்றும் […]
புதுகை- ஸ்ரீ தண்டாயுதபாணி கோவில் தைப்பூச சிறப்பு வழிபாடு
புதுக்கோட்டை நகரில் மேல ராஜவீதி தெற்கு நான்காம் வீதி சந்திப்பில் அருள் பாலித்துவரும் அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது ஆலயத்தில் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு திருநீர் பால் தயிர் தேன் பஞ்சாமிர்தம் மஞ்சள் நீர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாரதனை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தில் உற்சவர் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கும் சிறப்பு அலங்காரம் மகா தீபாரதனை நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் […]
புதுகை திராவிடர் மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
புதுக்கோட்டையில் திராவிடர் மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் மாணவர் கழகம் சார்பில் பாராமெடிக்கல்படிப்புகளிலும் நீட்தேர்வை திணிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் நே.குட்டிவீரமணி தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் மாங்காடு மணியரசன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் அறிவொளி,துணைத்தலைவர் எஸ்.கண்ணன் மற்றும் அரசுஇளங்கோ, வீரப்பன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்.
புதுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு
புதுக்கோட்டை அரசுப்பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பு பயிலும்போது மாதந்தோறும் ரூ ஆயிரம் வீதம் 10 ஆயிரமும், பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும்போது மாதந்தோறும் ரூ ஆயிரம் வீதம் 10 ஆயிரமும் ஆக மொத்தம் ரூ 20 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக அரசால் வழங்கப்படுகிறது. அந்த முறையில் இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்விற்கு 5574 மாணவர்கள் […]