புதுகை கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் மு அருணா தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன்,இணை இயக்குநர் (வேளாண்மை) மு.சங்கரலெட்சுமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்ம.தீபாசங்கரி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மு.க.பாரதி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமா, மாவட்ட வன அலுவலர்எஸ். கணேசலிங்கம் , மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்த. நந்தகுமார் , விவசாயிகள் சங்கபிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

சிப்காட் தொழிற்பூங்காவில் தூய்மை பணி- அமைச்சர் மெய்யநாதன் பார்வை

புதுக்கோட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பூங்காவில் மாபெரும் தூய்மைப் பணி முகாமினை ஆட்சியர் மு.அருணா தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா,சிப்காட் திட்ட அலுவலர்சீ. கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

கல்லூரி மாணவியர்களுக்கு லேப்டாப் வழங்கிய புதுகை கலெக்டர்

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் உயர் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக “உலகம் உங்கள் கையில் ” என்னும் மாபெரும் திட்டத்தில் 20லட்சம் மடிக்கணிணிகள் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 10லட்சம் மடிக்கணினிகளை கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் /மாநகராட்சி கலைஞர் கருணாநிதிஅரசு மகளிர் கலைக்கல்லூரியில்நடைபெற்ற நிகழ்ச்சியில்மாவட்ட ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டு மடிக்கணிணிகளை கல்லூரி […]

மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கான ஆர்டரை கலெக்டர் வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை யின்சார்பில்நடைபெற்ற மாவட்ட மீன்வளர்ப்போர்முகமை மேலாண்மை குழு கூட்டத்தில்ஆட்சியர் மு.அருணா கருணை அடிப்படையில் மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கு நேரடிபணிநியமன ஆணைகளை வழங்கினார் . உடன் திருச்சி மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் வெ.பிரபாவதி, புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைஉதவி இயக்குனர் ந.பஞ்சராஜா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

மாற்றுதிறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்த புதுகை கலெக்டர்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்ஆட்சியர் மு.அருணா மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க. பிரேமலதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி… புதுகை கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை மாநகராட்சி, கணேஷ்நகர் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை பணிகளான வாக்குசாவடி நிலை அலுவலர்கள் , வாக்காளர்களின் இல்லத்திற்கு சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட கலெக்டர் அருணா இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். உடன் புதுக்கோட்டை மாநகராட்சி கமிஷனர் நாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.