புதுகை- கல்லூரியில் சமத்துவ பொங்கல்- அமைச்சர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி மாட்சிமை தங்கிய மாமன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழாவினை ஆட்சியர் மு.அருணா தலைமையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்ஆகியோர் இன்றைய தினம் துவக்கி வைத்து பொதுமக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கலிட்டனர். உடன் மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் , சட்டமன்ற உறுப்பினர்கள் வை.முத்துராஜா, எம்.சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், துணை மேயர் […]

புதுவையில் 85,500 வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்

புதுச்சேரி, தமிழகம், மேற்கு வங்கம் உட்பட நாட்டின் பல மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக வாக்காளர் சிறப்பு தீவி திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் அண்மையில் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரியில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். முன்னதாக புதுவையில் 8,51,775 பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தன. […]

புதுவை- விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்- பரபரப்பு

தமிழக வெற்றிக்கழகத் தலைவா் விஜய் இன்று புதுவை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறாா்.   5 ஆயிரம் பேருக்கு மட்டுமே பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்று காவல் துறை கண்டிப்புடன் கூறியுள்ளது. இதன்படி, பொதுக்கூட்டத்திற்கு வரும் தவெக நிர்வாகிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், விஜய் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்த போது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால், அந்த நபரை […]