சீனாவில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்.. கடைவீதியில் ஜின்பிங்

சீன புத்தாண்டு வரும் 17-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை கொண்டாட அந்நாட்டு மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். இந்த புத்தாண்டு நெருப்பு குதிரையின் ஆண்டாக அறியப்படுகிறது. இது ஆற்றல், சுதந்திரம், வேகம் மற்றும் லட்சியத்தை குறிப்பதாக சீன மக்கள் நம்புகின்றனர்.இந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங், பீஜிங்கின் டவுன்டவுண் பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு திடீரென வருகை தந்தார். அவரைக் கண்டதும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உற்சாகமடைந்தனர். அங்குள்ள கடைவீதிகளில் நடந்து சென்ற அவர், வியாபாரிகளுடன் கலந்துரையாடினார். […]

கன்னியாகுமரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம்…பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்…எஸ்.பி. தகவல்

கன்னியாகுமரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக கன்னியாகுமரி எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது; குற்ற நடவடிக்கைகளை தடுக்க மாவட்டம் முழுவதும் 78 தற்காலிக சோதனைச்சாவடிகள் மற்றும் 5 Highway Patrol, 7 Crime Control Patrol, 5 Emergency Response Patrol, 5 Four wheeler Patrol, 30 Mobile Patrol, 2 Tourist Patrol ஆகிய நான்கு […]

புத்தாண்டு கொண்டாட்டம்…விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள்

புதுச்சேரியில் கிறிதுஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. “விடுதியில் தங்கும் சுற்றுலா பயணிகளின் சரியான முகவரி, ஆதார் பெற வேண்டும். விடுதியில் தங்குபவர்கள் யாரும் வெளியில் சுற்றக் கூடாது. அறையில் தங்குபவர்களின் முழு விவரங்களையும், காவல் நிலையத்தில் விடுதி உரிமையாளர்கள் ஒப்படைக்க வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நள்ளிரவு 2 மணிக்குள் பயணிகள் தங்கும் விடுதி அறைக்குள் வந்துவிட வேண்டும் என்று புதுச்சேரி காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட கேளிக்கை வரி […]

புத்தாண்டு கொண்டாட்டம்…குழந்தைகளை அழைத்துவந்தால் நடவடிக்கை…சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளில் மதுபானம் அருந்தும் இடத்துக்கு குழந்தைகள் அழைத்துச்செல்லப்படுவதாக புகார் வந்தால், உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கும்,காவல்துறைக்கும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. திருவேற்காட்டை சேர்ந்த எம்.காமேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது அருந்தும் இடத்திற்கு குழந்தைகள் அழைத்துவரப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார். இந்த செயல் சட்டப்படி […]