அமைதி, நல்லிணக்கம் நிறைந்த ஆண்டாக 2026 அமையட்டும்…முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

அமைதியும், நல்லிணக்கமும், மகிழ்ச்சியும், புதிய வெற்றிகளும் நிறைந்த ஏற்றமிகு ஆண்டாக 2026 அனைவருக்கும் அமைந்திட புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள 2026 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் செய்தி: பல வகைகளிலும் தமிழ்நாட்டுக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்த 2025க்கு விடைகொடுத்து, இதுவரை காணாத மாபெரும் வெற்றியை வழங்கவுள்ள 2026ல் அடியெடுத்து வைக்கத் தயாராகிறோம். தமிழ் வளர்ச்சிக்கும் தமிழர் எழுச்சிக்கும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும் மிகச் சிறந்த ஆண்டாக 2025 அமைந்தது என்றால் […]