ரூ.4 கோடி மதிப்புள்ள நகைகள் திருட்டு: வங்கி உதவி மேலாளர் கைது

பெங்களூரு கிரிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தவர் கிரண்குமார். இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த நகைகளைச் சரிபார்த்தபோது, சுமார் 2 கிலோ 783 கிராம் தங்கம் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், உதவி மேலாளர் கிரண்குமாரே அந்த நகைகளைத் திருடியது அம்பலமானது. திருடப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.4 கோடியே 12 லட்சம் ஆகும். அவர் அந்த […]

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மீண்டும் ஐபிஎல்

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை விளையாட அனுமதிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மைதானத்தில் 35,000 பார்வையாளர்கள் வரை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் தொடங்குவதற்கு முன்பாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் அதன் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. பெங்களூருவின் அடையாளமாகத் திகழும் எம். சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை கர்நாடக அரசு தற்போது நீக்கியுள்ளது. இதன் மூலம், வரவிருக்கும் ஐபிஎல் […]

WPL 2026-2வது கோப்பை…சாதனை படைத்த பெங்களூர் மகளிர் அணி!

பெங்களூர் முன்னாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) உரிமையாளர் விஜய் மல்லையா, RCB பெண்கள் அணி WPL 2026 தொடரில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். X (முன்பு ட்விட்டர்) தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்: “RCB பெண்கள் WPL அணிக்கு இதயத்திலிருந்து வாழ்த்துகள். தொடர்ச்சியாக இரண்டாவது சாம்பியன்ஷிப். நன்கு சம்பாதித்தது, நன்கு வென்றது. RCB ஆண்கள் அணிக்கும் இது உத்வேகமாக அமையும். அவர்களும் கோப்பையை தக்க வைத்துக்கொள்ளட்டும்.” இந்த வெற்றி RCB அணிக்கு […]

பெங்களூரு அருகே சுற்றுலா பஸ் தீ விபத்து..உயிர்தப்பிய 30 பயணிகள்

பெங்களூரு-துமகுரு தேசிய நெடுஞ்சாலையில் நெலமங்களா அருகே கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலாப் பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து மின்சாரக் கம்பியில் மோதி தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. பேருந்திலிருந்து 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அரைகுறை ஆடையுடன் வலம் வந்த பெண் – தட்டிக்கேட்ட பெண் போலீஸ்க்கு நேர்ந்த கதி: பெங்களூருவில் பரபரப்பு

பெங்களூருவின் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் கே.ஆர். புரம் ரயில் நிலையப் பகுதியில், தாமினி என்ற மோகினி (31) என்ற இளம்பெண் அரைகுறை ஆடையுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். தனியார் நிறுவன மேலாளராகப் பணியாற்றும் இவரைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் கேலி செய்தபோதும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர் சாலையின் நடுவே நடந்து சென்றதால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அங்குப் போக்குவரத்துப் பணியில் இருந்த லட்சுமி நரசம்மா என்ற பெண் காவலர், மோகினியிடம் சென்று […]

அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து…மூச்சுத்திணறி பெண் என்ஜினீயர் பலி

பெங்களூரு ராமமூர்த்தி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மங்களூருவைச் சேர்ந்த சர்மிளா (34) என்ற பெண், பெங்களூரு ராமமூர்த்தி நகர், சுப்பிரமணிய லே-அவுட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராகப் பணியாற்றி வந்த அவர், தனது தோழியுடன் தங்கியிருந்தார். கடந்த 2-ம் தேதி அவரது தோழி சொந்த […]

லிவ்இன் காதலியிடம் ரூ.75 லட்சம் மோசடி-தங்கையிடம் அத்துமீறிய ஜவுளி தொழிலதிபர்

பெங்களூரு: திருமண ஆசை காட்டி இளம் பெண்ணை ஏமாற்றி 75 லட்சம் ரூபாய் மோசடி செய்ததுடன், அவரது தங்கையான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலதிபரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுபம் சுக்லா (27) என்பவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஜவுளி தொழில் செய்து வருகிறார். இவர் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரிடம் நண்பர் போல பழகி, அவர்களின் 21 வயது மகளைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாகல்குண்டே பகுதியில் […]

மாரடைப்பால் உயிருக்கு போராடிய கணவன்..லிப்ட் கேட்டு தவித்த மனைவி!

பெங்களூரு : நகரின் பிஸ்யான சாலையில் நடந்த பரிதாப சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரூபா என்ற பெண், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு துடித்த கணவர் வெங்கட்ரமணாவை காப்பாற்றும் படி சாலையோரம் நின்று கண்ணீர் மல்க கதறினார். வாகனங்களை நிறுத்தி உதவி கேட்டு கெஞ்சியபோதும், பல வாகன ஓட்டிகள் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டனர். இதனால் உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காமல் போனதால் வெங்கட்ரமணா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் நடந்தது பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஒரு பிஸ்யான […]

பெங்களூருவில் ஏடிஎம் வாகனத்தை கடத்திச் சென்று ரூ.7.11 கோடி கொள்ளை

பெங்களூரில் பட்டப் பகலில் நடந்த துணிகரக் கொள்ளை பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் சிஎம்எஸ் நிறுவனத்தின் ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் கொண்ட வேனை, ஜேபி நகர் அசோக் பில்லர் அருகே மூன்று முதல் நான்கு பேர் ஆயுதம் காட்டி தடுத்து நிறுத்தியுள்ளனர் தங்களை RBI அதிகாரிகள் என கூறி வாகன ஊழியர்களை மிரட்டிய கொள்ளையர்கள், பின்னர் டெய்ரி சர்கிள் பறக்கும் பாலம் வரை வேனை கடத்திச் சென்று பணத்தை இன்னோவா காரில் […]