ஒரு ரூபாய் கேட்டு பெண்ணிடம் ரூ.14 ஆயிரம் மோசடி
சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் சாந்தி (31). மதுரவாயலில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவர், பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்து இறங்கிய வாலிபர் ஒருவர், சாந்தியிடம், “நான் ஆட்டோவில் சவாரி வந்தேன். டிரைவருக்கு ரூ.300 கொடுக்க வேண்டும். கையில் பணம் இல்லை. ரூ.300 கையில் கொடுத்தால் அதனை ‘ஜிபே’யில் அனுப்பி விடுவதாக” கூறினார்.அதற்கு சாந்தி சம்மதம் தெரிவித்தார். இதனால் தனக்கு ஒரு ரூபாய் அனுப்புமாறு கூறினார். அதன்படி சாந்தியும், […]