பஸ்சில் பெண்ணிடம் ரூ. 1.90 லட்சம் பணம் மர்ம நபர் கைவரிசை
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி சித்திரைகனி (40). இவர் நேற்று தனது குடும்ப தேவைக்காக அரசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகையை ரூ.1.90 லட்சத்துக்கு அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். பின்னர் அந்த பணத்தை துணிப்பையில் வைத்துக்கொண்டு திசையன்விளைக்கு புறப்பட்டார். உடன்குடியில் இருந்து திசையன்விளைக்கு சென்ற அரசு டவுன் பஸ்சில் ஏறி சென்றார். அப்போது பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சித்திரைகனி நின்றவாறு பயணித்தார்.திசையன்விளைக்கு சென்றதும் பஸ்சில் இருந்து […]