திருமணம் செய்ய வற்புறுத்தியதால் பெண் கொலை

சேலம் அஸ்தம்பட்டி சுப்பிரமணியபுரம் விரிவாக்க பகுதியை சேர்ந்த டெல்லி ஆறுமுகத்தின் 2-வது மகள் பாரதி (38). சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி ஆறுமுகம் இறந்து விட்டதால், பாரதி தன்னுடைய தாயுடன் வசித்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. பாரதி தனது வீட்டில் டியூசன் எடுத்து வந்தார். அவருக்கும், சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் உதயசரண் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இரவு நேர சினிமாவுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் டியூசன் சென்டருக்கு […]