பெரம்பலூர் ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த 616 காளைகள்- மல்லுக்கட்டிய 390 வீரர்கள்
பெரம்பலூர் பூலாம்பாடியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 616 காளைகள் சீறிப்பாய்ந்தன. அவற்றை அடக்க 390 வீரர்கள் மல்லுக்கட்டினர். 76 வீரர்கள் காயம் அடைந்தனர்.பெரம்பலூர் மாவட்டத்தில் அரசலூர், அன்னமங்கலம், விசுவக்குடி, பூலாம்பாடி, கள்ளப்பட்டி, சில்லக்குடி கொளத்தூர், தொண்டமாந்துறை ஆகிய கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு 2026ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்முறையாக நேற்று வேப்பந்தட்டை தாலுகா, பூலாம்பாடி கிராமத்திலுள்ள மேற்குத்திடலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்தப் போட்டிகளை […]
பெரம்பலூர் – டிரான்ஸ்பார்மரில் இருந்து காப்பர் கம்பிகள் திருட்டு
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சி துணை மின் நிலையத்துக்குட்பட்ட கொளக்காநத்தம்-சாத்தனூர் சாலையில் காட்டுப்பகுதியில் ஒரு டன் எடை கொண்ட டிரான்ஸ்பார்மர் உள்ளது. இங்கிருந்து விவசாய வயல்களுக்கு மின் இணைப்பு செல்கிறது. இந்நிலையில் நேற்றிரவு மர்ம நபர்கள் இந்த டிரான்ஸ்பார்மரை இடித்து தள்ளி சேதப்படுத்தினர். இதனால் மின் இணைப்பு கூட்டானது. அதன்பின்னர் டிரான்ஸ்பார்மரிலிருந்த 75 கிலோ காப்பர் கம்பிகள், 225 லிட்டர் டிரான்ஸ்பர் ஆயிலை திருடி சென்று விட்டனர். தகவலறிந்து வந்த கொளக்காநத்தம் மின் வாரிய உதவி […]
பாதயாத்திரை சென்ற பெண்கள் மீது கார் மோதல்: 4 பேர் பலி
பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை சமயபுரத்திற்குப் பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் 4 பெண் பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தைப்பூசத்தை முன்னிட்டு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குப் பாதயாத்திரையாகப் புறப்பட்டனர். வழியில் சேலத்தில் இருந்து வந்த மற்றொரு குழுவினருடன் இணைந்து சுமார் 60 பேர் கொண்ட குழுவாக இன்று அதிகாலை 5 மணி அளவில் பெரம்பலூர் சிறுவாச்சூர் மேம்பாலம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் […]
பெரம்பலூர் அருகே போலீசார் என்கவுன்டரில் பிரபல ரவுடி பலி…
பெரம்பலூர் அருகே போலீசார் நடத்திய என்கவுன்டரில் மதுரையைச் சேர்ந்த ரவுடி அழகுராஜ் உயிரிழந்தார். போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய கும்பலை சேர்ந்த ரவுடி அழகுராஜ் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். ரவுடி வெள்ளைக்காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திரும்ப அழைத்துச் சென்றபோது போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினார்.
பெரம்பலூர்- போலீஸ் வாகனம் மீது நாட்டுவெடிகுண்டு வீச்சு-2 காவலர்கள் காயம்
பெரம்பலூர், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே குற்றவாளிகளை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இதில் காவலர்கள் விக்னேஷ்குமார், மாரிமுத்து பாண்டி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் 2 பேர் புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.மதுரையில் பழிக்குப் பழியாக 22 ஆண்டுகளில் 21 கொலைகள் நடந்த நிலையில் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. ரவுடி வௌ்ளை […]
நள்ளிரவில் நேர்ந்த இரட்டை விபத்து – கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட கார்
பெரம்பலூர் அருகே கார் மோதி ஒருவர் பலியான நிலையில், அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்ததில் தனியார் நிறுவன மேலாளரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி உறையூர் அருகே உள்ள பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் குணா (38). பெரம்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனிதவள மேலாளராகப் பணியாற்றி வந்த இவர், நேற்று (17-ம் தேதி) இரவு வேலை முடிந்து தனது காரில் திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இரவு 11 மணி […]
சேலம், பெரம்பலூர் உட்பட 4 மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
கடந்த சில மாதங்களாகவே, நீதிமன்றங்கள், பள்ளிகளுக்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதும், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் படைகள் சோதனையில் ஈடுபடுவதும் வாடிக்கையாக நிகழ்ந்து வருகின்றது. இந்த நிலையில், நேற்று பெரம்பலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, சேலம் ஆகிய நான்கு மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து நான்கு நீதிமன்றங்களிலும் பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞர்களை அவசர அவசரமாக வெளியேற்றி போலீஸார் […]