ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் பேசக்கூடாது- நடிகை திரிஷா காட்டம்
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 13ம் தேதி சேலத்தில் நிர்வாகிகள் சந்திப்பு பொதுக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், “நடிகை திரிஷாவைவிட்டு விஜய் வெளியே வரவேண்டும். வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும்” எனப் பேசியது பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. நடிகை திரிஷா குறித்த நயினார் நாகேந்திரன் கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். ஒரு பெண் குறித்து பொறுப்பில் இருக்கும் கட்சி […]
அண்ணன் ஈபிஎஸ்-ஐ முழு மனதாக ஏற்கிறோம்.. டிடிவி பேச்சு
NDA கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் EPS என TTV கூறியதும், கூட்டத்தில் இருந்தவர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். மேலும், ‘அண்ணன்’ EPS-ஐ முழு மனதார ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் எல்லோரும் அம்மாவின் வழிவந்தவர்கள். எங்களுக்குள் சண்டை இருந்தது உண்மைதான். ஆனால், அம்மாவின் ஆட்சியை கொண்டு வர அனைவரும் ஒன்றாக இணைந்துள்ளோம் என கூறியுள்ளார்.
கரூரில் 25-ம் தேதி வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்- VSB அழைப்பு
முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட செயலாளரரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறியதாவது.. கரூர் மாவட்ட மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் வரும் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் நடைபெறுகிறது. EX.Mp ஆர்.எஸ்.பாரதி சிறப்புரையாற்றுகிறார். கழக அமைப்புச் செயலாளர் டான் அசோக் , தி. பிரபு தலைமைக் கழக பேச்சாளர் பங்கேற்கிறார். பொதுக்கூட்டத்திற்கு வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன் […]
பொதுக்கூட்டம் பேரணி நடத்த என்னென்ன கட்டுப்பாடுகள்… முழுவிபரம்
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி,மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அங்கிகரீக்கப்பட்ட தேசிய கட்சிகளான, காங்கிரஸ், பாஜக, சிபிஎம், ஆம் ஆத்மி, தேசிய மக்கள் கட்சி, பகுஜன் சமாஜ், அங்கிகரீக்கப்பட்ட மாநில கட்சிளான, திமுக, அதிமுக, தேமுதிக, […]