மத்திய மண்டல புதிய ஐஜியாக வே. பாலகிருஷ்ணன் பொறுப்பேற்பு
தமிழக காவல்துறையின் மத்திய மண்டலத் தலைவராக (ஐஜி) வே. பாலகிருஷ்ணன் இன்று (வெள்ளிக்கிழமை) முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக அரசால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றத்தைத் தொடர்ந்து, மத்திய மண்டல ஐஜியாக வே. பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், திருச்சியில் உள்ள மத்திய மண்டல காவல்துறை அலுவலகத்திற்கு இன்று காலை வருகை தந்த அவர், அலுவலகக் கோப்பில் கையெழுத்திட்டு தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
புதுக்கோட்டை DSP ஆக பிருந்தா பொறுப்பேற்பு
புதுக்கோட்டை உட்கோட்டகாவல் துணைக் கண்காணிப்பாளர் ஆக பொறுப்பேற்றுள்ளஇரா.பிருந்தா (DSP) ஆக புதுக்கோட்டை நகர காவல் நிலையத்திற்கு வருகைதந்து அங்கு பத்திரிகை யாளர்களைசந்தித்தார். அப்போது அவர் மாநகர உட்கோட்டத்தில் சட்டம் , ஒழுங்கு பிரச்சினை கள், போதைப் பொருட்கள் நடமாட்டம் மற்றும் பெண்கள் பாதுகாப்புகுறித்த பிரச்சினை களை என்னிடம் தைரியமாக கூறலாம். அதற்கான நடவடிக்கைகள்உடனடியாக எடுக்கப்படும். தொடர்பு கொள்வதற்கு 9789918079 என்ற வாட்ஸ்அப்எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்கள் தகவல் தெரிவிக்கலாம் . இவ்வாறு கூறினார்.