போகி பண்டிகை- வீட்டை கொளுத்திய போதை ஆசாமி.. நடந்தது என்ன?

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கருங்கல்பாளையம் ராஜகோபால் தோட்டம் இரண்டாவது வீதியில் வசித்து வருபவர் செந்தில் மற்றும் சுதா தம்பதியினர். இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் செந்தில் மனைவி சுதாவிடம் அவ்வப்போது மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் செந்திலுடன் வாழ பிடிக்காத சுதா பிரிந்து செல்வதாக கூறி வந்துள்ளார். ஆட்டோ ஓட்டுனராக உள்ள செந்தில் இன்று வேலைக்கு செல்லாமல் காலையிலேயே மீண்டும் வீட்டில் மனைவி சுதாவிடம் தகராறு செய்துள்ளார். தகராறு ஒரு […]

திருப்பத்தூர் மாவட்டத்தில் போகி பண்டிகை கோலாகலம்

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தை பொங்கலை வரவேற்கும் விதமாக, அனைத்து வீடுகளிலும் பழைய பொருட்கள் மற்றும் துணிகளை எரித்து, வீடுகளை சுத்தம் செய்து மக்கள் போகி பண்டிகையை பாரம்பரிய முறையில் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் போகி பண்டிகை என்பது மார்கழி மாதத்தின் நிறைவு நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் துவக்க நாளாக போகி பண்டிகை கருதப்படுகிறது. “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழியைப் போல, “பழைய கழிதலும், புதியன புகுதலும்” என்பதே […]

திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பு போகி தீயிட்டு கொண்டாட்டம்.!

திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பு போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. போகி பண்டிகை விவசாயத்தின் கடவுளிடம் ஆசி பெறுவதற்கான நாளாக கருதப்படுகிறது. அறுவடை திருநாளின் ஆரம்ப நாளாகவும் இந்த நாள் நாட்டின் பல பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் துவக்கமாக கொண்டாடப்படுவது போகிப் பண்டிகையாகும். பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள், வீட்டை சுத்தம் செய்து, தேவையற்ற பொருட்களை தீயிட்டு எரிக்கும் நாள் போகிப் பண்டிகை ஆகும். இதனை பழையன பழிதலும் புதியன புகுதலுமே போகி பண்டிகையாக முன்னோர்கள் கூறி […]