நாளை மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்: போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக பாஜக கூட்டணி தனது தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள பகுதியில் நாளை நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து வந்துள்ள மத்திய பாதுகாப்பு படை போலீசார் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. […]

பிரதமர் 19ம் தேதி கோவை வருகை… போக்குவரத்து மாற்றம்

பிரதமர் கோவை வருகையை முன்னிட்டு  19ம் தேதி பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  கோவை மாநகர காவல்துறை கூறியிருப்பதாவது…சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து கோவை மாநகருக்கு வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து விமான நிலையம் வழியாக வர தடை செய்யப்பட்டு உள்ளது. மாறாக நீலாம்பூரில் இருந்து எல் அண்டு டி பைபாஸ் வழியாக சிந்தாமணிபுதூர், ஒண்டிபுதூர், சிங்காநல்லூர் வழியாக வரவேண்டும். […]