பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மீண்டும் ஐபிஎல்

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை விளையாட அனுமதிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மைதானத்தில் 35,000 பார்வையாளர்கள் வரை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் தொடங்குவதற்கு முன்பாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் அதன் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. பெங்களூருவின் அடையாளமாகத் திகழும் எம். சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை கர்நாடக அரசு தற்போது நீக்கியுள்ளது. இதன் மூலம், வரவிருக்கும் ஐபிஎல் […]

புதுகை முனீஸ்வரர் ஆலய ஜல்லிக்கட்டு போட்டி துவக்கம்

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பட்டியில் நடைபெற்ற முனீஸ்வரர் ஆலய  ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.  புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர  கே கே செல்லபாண்டியன் ,புதுக்கோட்டை எம்எல்ஏ. வை. முத்துராஜா ஆகியோர்கள் துவக்கி வைத்தனர், பின்னர் சிறந்த காளைகளுக்கும், வீரர்களுக்கும் பரிசு வழங்கினர். நிகழ்வில் அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், விழா குழுவினர் மாடுபிடி வீரர்களும், பார்வையாளர்களும், கலந்துகொண்டனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கண்டுகளிக்கும் முதல்வர்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர். அலங்காநல்லூரில் அமைக்கப்பட்ட மேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிடுகிறார். மாடுபிடி வீரர்களுக்கு தங்க மோதிரத்தை அணிவித்து வருகிறார்.

பிப்.22ல் பெண்களுக்கான இரவு நேர மாரத்தான் போட்டி.. கோவை கமிஷனர் தகவல்

பெண்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு கோவையில் வரும் பிப்ரவரி 22ல் இரவு நேர மரத்தான் போட்டி நடைபெற உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார். கோவையில் பெண்களின் பாதுகாப்பு, சுய மேம்பாடு மற்றும் பாதுகாப்பான நகரத்தை உருவாக்கும் நோக்கில், வரும் பிப்ரவரி 22ஆம் தேதி பெண்களுக்கான பிரத்தியேக இரவு நேர மரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்த மரத்தான் போட்டிக்கான லோகோ அறிமுக நிகழ்ச்சி கோவை மாநகர காவல் ஆணையர் https://etamil.zevenstone.com/womens-night-marathon-competition-on-feb-22/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D நடைபெற்றது. இதில் […]

அதிமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு

தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபை பொதுத்தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற கட்சி நிர்வாகிகள், தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 23-ந்தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுக்கலாம்…முதல் நாளான இன்று மட்டும் நண்பகல் 12 மணி முதல் அதற்கான படிவங்களை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து […]