லாரியில் கடத்தி வந்த ரூ.26 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

மியான்மர், வங்காளதேசம் போன்ற வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் போதைப்பொருள் கடத்தி வரப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதேபோல், வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து அதை விற்பனை செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன.இந்நிலையில், மிசோரம் மாநிலத்தில் இருந்து அசாம் மாநிலத்திற்கு லாரியில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக அசாம் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அசாமின் கசார் மாவட்டம் ரொங்க்பூர் […]