கன்னியாகுமரியில் கடையடைப்பு; போலீசார் குவிப்பு

கன்னியாகுமரி கன்னியம்பலம் பகுதியில் உள்ள கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று கன்னியாகுமரியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோயிலுக்கு சொந்தமான கடைகள் உள்ளன. குறிப்பாக கன்னியம்பலம் பகுதியில் 12 கடைகள் உள்ளன. இந்தநிலையில் கன்னியாகுமரியை சேர்ந்த நாகராஜன், கன்னியம்பலத்தின் பாரம்பரியத்தை கெடுக்கும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், கடைகளை அகற்றி பாரம்பரியத்தை காக்க வேண்டும் எனக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த […]

ஸ்ரீரங்கம் கோவிலில் போலீசார் குவிப்பு…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் உச்ச நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நாளை அதிகாலை நடக்க இருக்கும் நிலையில், இன்று (டிச.29) அதிகாலை முதலே திருச்சி மற்றும் பிற மாவட் டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் ஸ்ரீரங்கத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை துறைமுகத்தில் லாரி உரிமையாளர்கள் போராட்டம்…போலீசார் குவிப்பு

சென்னை துறைமுகம், எண்ணூர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு கண்டெய்னர் லாரிகளை இயக்கும் லாரி உரிமையாளர் சங்கத்தினர், கனரக வாகனங்களின் தர சான்றிதழை புதுப்பிக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்தும், மோட்டார் வாகன நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த 9-ந்தேதி முதல் துறைமுகங்களுக்கு கண்டெய்னர் லாரிகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், ஒரு சில கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் தாங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை […]