இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் – இருவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விவேகானந்தர் காலனி கடற்கரை பகுதியில், இலங்கைக்கு சட்டவிரோதமாகப் பொருட்கள் கடத்தப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் போலீசார் நேற்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் கடற்கரைப் பகுதியில் சோதனை செய்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் பதிவு எண் இல்லாத பைபர் படகு ஒன்று நின்றுகொண்டிருந்தது. […]