மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 – முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழக மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்.1.31 கோடி மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு […]
மகளிர் உரிமைத்தொகைரூ.2,000- அதிமுக தேர்தல் வாக்குறுதி
MGR-ன் 109-வது பிறந்தநாளையொட்டி 2026 தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை EPS சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதில், மகளிர் நலன் குல விளக்கு திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூ.2,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகளிர் போல ஆண்களுக்கும் நகர பஸ்களில் இலவச பயணம் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்ய புதிய வசதி அறிமுகம்
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பித்து, ரூ.1000 கிடைக்க பெறாத பெண்கள் மேல்முறையீடு செய்வதற்காக தமிழக அரசு புதிய ‘குறைதீர்வு’ இணையதள இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின் பெயர், ரேஷன் அட்டை எண் மற்றும் தொலைபேசி விவரங்களை பதிவிட்டு, தகுதிக்கான கூடுதல் ஆவணங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு: https://kmut.tnega.org/kmut-grievance/
விடுபட்டவர்களுக்கு டிசம்பரில் இருந்து மகளிர் உரிமைத்தொகை…முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…
ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியில் 605 கோடி ரூபாயில் முடிவுற்ற பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததுடன் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது, ஒரு கோடியே 14 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குகிறோம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் ரூ.1000 வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அதோடு, ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 68.85 லட்சம் […]