அரியலூர் பொங்கல் பரிசாக மண் பானைகளை வழங்க அரிசுக்கு கோரிக்கை

பொங்கல் பரிசு தொகுப்பில் சட்டி, பானை உள்ளிட்ட மண்பாண்ட பொருட்களை, அரசு கொள்முதல் செய்து வழங்கிட வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசு உணவுப் பொருட்கள் வழங்கல் துறை மூலமாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் பரிசுத் தொகுப்பை ரேஷன் அட்டை காரர்களுக்கு வழங்கி வருகிறது. பச்சரிசி, கரும்பு, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட்டு வருகிறது. […]