மது போதையில் தகராறு: முடி திருத்தும் தொழிலாளி அடித்துக் கொலை – 2 வாலிபர்களுக்கு போலீஸ் வலை

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அய்யம்பேட்டை அருகே உள்ள தேவன்குடி மீனவர் காலனியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (50). முடி திருத்தும் தொழிலாளியான இவருக்கு, சரிதா என்ற மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். சம்பவத்தன்று, இளங்கோவன் வீரமாங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (24) மற்றும் முத்துக்குமார் (24) ஆகியோருடன் சேர்ந்து பட்டயான்கலம் பகுதியில் உள்ள ஒரு மோட்டார் கொட்டகையில் மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ் மற்றும் […]