தில்’லான பாட்டியை தேடி சென்று கெளரவித்த போலீஸ்
டிராபிக் போலீசுக்கே சவால் விடும் வகையில், கேரளாவின் பிரபாவதி என்ற பாட்டி துணிச்சலுடன் செய்த சம்பவம் SM-ல் வைரலாகி வருகிறது. கோழிக்கோட்டில் ஸ்கூட்டரை நடைபாதையில் ஓட்டி வந்தவரை தடுத்து, அவரை சாலையில் பயணிக்க வைத்த பாட்டியை பலரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில் கேரள போலீசார் பிரபாவதியின் வீட்டிற்கே நேரில் சென்று அவருக்கு சால்வை அணிவித்து கெளரவித்துள்ளனர். அதன் வீடியோவையும் பகிர்ந்துள்ளனர்.
புதுகையில் தேமுதிக சார்பில் பேரறிஞர் அண்ணாவுக்கு மரியாதை
சுப்பிரமணியபுரத்தில் தேமுதிக சார்பில் பேரறிஞர் அண்ணாவுக்கு நினைவஞ்சலி. புதுக்கோட்டை பிப் 04-தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச் செயலாளர் ஆணைக்கிணங்க பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளையொட்டி அறந்தாங்கி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சுப்பிரமணியபுரத்தில் புதுக்கோட்டை தெற்குமாவட்ட செயலாளர் ஏ.சசிகுமார் தலைமையில் அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் பெரி.கலைஞர் அறந்தாங்கி தொகுதி பொறுப்பாளர் மாவட்ட அவைத் தலைவர் ஆவுடையார் கோவில் வி. மணிமுத்து , ஆலங்குடி தொகுதி பொறுப்பாளர் பழ.நேதாஜி சீனிவாசன், மணமேல்குடி ஒன்றிய செயலாளர் ஏ. […]
புதுகை- அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மரியாதை
புதுக்கோட்டையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57வது நினைவு தினத்தையொட்டிமாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் இருந்து வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் திமுகவினர் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு வந்து பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர் நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அரு.வீரமணி, மேயர் திலகவதிசெந்தில் ,முன்னாள் எம்.எல்.ஏக்கள் கவிதைப்பித்தன், கார்த்திக் தொண்டைமான் , சட்டமன்ற உறுப்பினர்வை.முத்துராஜா, துணைமேயர் லியாகத்தலி, மற்றும் […]
அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
அண்ணாவின் நினைவு நாளில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்த அமைதிப் பேரணியானது சென்னை வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தைச் சென்றடைந்தது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் நேரு, தயாநிதி மாறன், ஆ.ராசா மற்றும் கட்சியினர் பங்கேற்றனர். தொடர்ந்து, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதல்-அமைச்சர் ம்.க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், திமுக எம்.பி.ராசா .அமைச்சர்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலி […]
77 வது குடியரசு தின விழா…அரியலூரில் தேசிய கொடி ஏற்றி மரியாதை
இந்திய திருநாட்டின் 77 வது குடியரசு தின விழா நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டப்பட்டது.மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்தார்.பின்னர் திறந்த ஜீப்பில் சென்று, மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பா சாஸ்திரி ஆகியோர் காவல் துறையின் அணிவகுப்பை பார்வையிட்டனர். மேலும் உலகெங்கும் சமாதானம் நிலவ வெண்புறாக்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]
புதுகையில் காமராஜர் சிலைக்கு பெனட் அந்தோணி ராஜ் மரியாதை
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் அறிவிக்கப்பட்டுள்ள பெனட் அந்தோணி ராஜ் புதுக்கோட்டை காமராஜர் புரத்தில் உள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் முன்னாள் மாவட்ட தலைவர்கள் முருகேசன் ,ராமசுப்புராம், மற்றும் துரைதிவ்வியநாதன்,சூர்யாபழனியப்பன்,மதன் கண்ணன் மற்றும் ஏராளமான காங்கிரசார் உள்ளனர்.
தந்தை பெரியார் நினைவு நாள்.. VSB தலைமையில் திமுக மரியாதை
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு, கரூர் திருமாநிலையூர் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்குக் கரூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி இன்று மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24-ம் தேதி பெரியார் நினைவு நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை கரூர் திருமாநிலையூர் பகுதிக்கு வருகை தந்த செந்தி ல்பாலாஜி அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். “சமூக […]
பேராசிரியர் க.அன்பழகன் படத்திற்கு முதல்வர் மரியாதை
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். கீழ்ப்பாக்கம் இல்லத்தில் மரியாதைசென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பேராசிரியரின் இல்லத்திற்கு இன்று காலை நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள், திமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற […]
அம்பேத்கர் உருவப்படத்திற்கு விஜய் மலர் தூவி மரியாதை
த.வெ.க. தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாக எளியவர்களுக்கும் அதிகாரம் வழங்கி, எல்லோருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர், நம் கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அவரது நினைவுநாளை முன்னிட்டு, நமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் காட்டிய வழியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையைப் பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம். என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் நினைவு நாள்.. புதுகையில் காங்., மரியாதை
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நினைவு நாள்…. புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ( வடக்கு/ தெற்கு) சார்பில் புதுக்கோட்டை அரசு பொது அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் வி.முருகேசன் , ராம. சுப்புராம் , அகில இந்திய காங்கிரஸ் கட்சி பார்வையாளர் புஷ்பா அமர்நாத்ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற தலைவர் துரை. திவியநாதன் ,மாநில பொதுக்குழு உறுப்பினர்வழக்கறிஞர் சந்திரசேகரன், மாநில பொதுச்செயலாளர் பெனட் […]